Letras

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொரு கொலுசொலி கேட்கிறதே
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பேயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிரேன்
எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலுக்கு நீரூற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொரு கொலுசொலி கேட்கிறதே
என்னை தாலாட்ட வருவாளோ(வருவாளோ)
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ(தருவாளோ)
தங்க தேராட்டம் வருவாளோ(வருவாளோ)
இல்லை ஏமாற்றம் தருவாளோ(தருவாளோ)
Written by: Ilaiyaraaja, Palani Bharathi
instagramSharePathic_arrow_out